ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் உப்பிலியப்பன் திருக்கோயிலில் கனகாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கும்பகோணம் உப்பிலியப்பன் வேங்கடாசலபதி திருக்கோயிலில் ராமநவமி பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. 10-வது நாளான சனிக்கிழமை கோயில் உள்ள பரிவார தெய்வங்களான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு பொற்காசுகளால் கனகாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் உலக மக்களின் நன்மைக்காக சிறப்பு வேள்ளியும் நடைபெற்று வந்தது . இந் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
—கோ. சிவசங்கரன்







