10 மாவட்டத் தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்காக 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். தமிழகத்தில் எந்த ஒரு ஏழை குடும்பத்திற்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்க கூடாது என அதிமுக அரசு கருதுவதாகக் கூறிய அவர், அதனால்தான் கான்கீரிட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார்.
பாவூர்சத்திரம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 10 மாவட்ட தலைநகரங்களில் 20 கோடி செலவில் பிரமாண்ட சந்தைகள் கட்டப்படும் என அறிவிப்பை வெளியிட்டார், அது போன்று ஒரு பெரிய சந்தையை நெல்லையிலும் கட்ட அரசு பரிசீலிக்கும் என முதல்வர் கூறினார்.







