தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் பெண்கள் வாக்குகளை பெரும்பான்மையாக பெறுவதற்காகவாவது தமிழக அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மதுக்கடைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் முதல்வர் பழனிசாமிக்கு கோரி்க்கை வைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், மது போதையினால் குற்றங்கள் பெருகி வருகின்றது என்றும், குடும்ப வாழ்விலும் மது பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இது குறித்து தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு மறந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதுக்கடைகள் மூலம் வரும் வருமானம் நல்லரசு உதாரணமல்ல என்றும், எனவே மதுக்கடைகளை பாதியாக குறைத்து, மீதியுள்ள கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவற்றையும் படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த தேர்தல் நேரத்தில் பெண்களின் வாக்குகளை பெறவாவது அரசு இந்த விசயத்தில் உறுதியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.