10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் நிர்வாக நலன் கருதி…

தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், பணியிட மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தருமபுரி, கன்னியாகுமரி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.