முக்கியச் செய்திகள் பக்தி

‘மதுரை மீனாட்சி கோவிலே எனக்கு தாய் வீடு’ – விசிறி தாத்தா

மதுரை மீனாட்சி கோவிலே தனக்கு தாய் வீடு என விசிறி தாத்தா தெரிவித்துள்ளார்.

விசிறி தாத்தா, இந்த பெயர் வெளி உலகுக்கு எந்த அளவு பரிட்சயம் என தெரியாது. ஆனால், மதுரைக்காரர்களுக்கு நன்கு அறிந்த பெயர். அதுவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பவர் விசிறி தாத்தா… கோவிலுக்கு வரும் மக்கள் கோடை வெயிலில் தவிக்கும்போது தன்னுடைய விசிறியால் மக்களின் மனதையும் உடலையும் குளிர்விப்பவர் விசிறி தாத்தா… இவரை பார்த்தவுடன் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம்.

93 வயசுலயும் எதிர்பார்ப்பில்லாமல் தெய்வ செயலாக நினைத்து மக்களுக்கு விசிறி வீசுவதாக கூறுகிறார் விசிறி தாத்தா என்னும் நடராஜ். 2 வருஷத்துக்கு பிறகு நடைபெறும் சித்திரை திருவிழா விசிறி தாத்தாவுக்கு கூடுதல் மகிழ்ச்சி தந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கோவில்களுக்கெல்லாம் சென்றிருந்தாலும் மதுரை மீனாட்சி கோவிலே தனக்கு தாய் வீடு என்கிறார் விசிறி தாத்தா…

அண்மைச் செய்தி: சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல்

வரும் 14ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 16ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்!

Ezhilarasan

திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்: பா.ரஞ்சித்

எல்.ரேணுகாதேவி

கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

Ezhilarasan