ஒரே நாளில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஆயிரத்து 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 14 லட்சத்து 35 ஆயிரத்து 569 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதியதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 394 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 72 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2 லட்சத்து 46 ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றின் வீரியத்தை குறைக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும், 16 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கான தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 168 கோடியே 47 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.








