ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 5 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் குரஜாலாவில் கூலி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதியதில்  5 பெண்கள்  உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 23 பேர்…

ஆந்திரா மாநிலம் குரஜாலாவில் கூலி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது லாரி மோதியதில்  5 பெண்கள்  உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி
தொழிலாளர்கள் 23 பேர் ஷேர் ஆட்டோ ஒன்றில் விவசாய வேலைக்காக சென்று
கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த ஆட்டோ ஆந்திர மாநிலம் எல்லையோரத்தில் உள்ள பக்நாடு மாவட்டம் குரஜாலாவில் வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.

லாரி அதிவேகத்தில் வந்து  மோதிய காரணத்தால் நொறுங்கிய ஆட்டோவில் பயணித்த கூலி தொழிலாளர்களில் 5 பெண்கள் உடல்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த குரஜாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.