”என்ன ஒரு அருமையான படைப்பு” – தியாகராஜன் குமாரராஜாவை பாராட்டிய இயக்குநர் நெல்சன்..!!

’மாடர்ன் லவ்’ சென்னை வெப்தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ’நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடை பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.  கடந்த 2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம்…

’மாடர்ன் லவ்’ சென்னை வெப்தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ’நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடை பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

கடந்த 2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஆன்தாலஜி தொடராக உருவாக்கப்பட்ட இதன் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் – மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ’மாடர்ன் லவ்’ தொடரின் சென்னை அத்தியாயம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள் : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன. இத்தொடரில் ஆறு அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன.

https://twitter.com/Nelsondilpkumar/status/1658729133084647427?t=JO7c4b2NNf4jSZPpopg99A&s=08

இந்நிலையில் இத்தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ’நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடை பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜாவின் ’நினைவோ ஒரு பறவை’ எபிசோடை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. காதலை எப்படி அணுகுவது என்பதை சுருக்கமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படுத்தும் அருமையான படைப்பு. காட்சிகளும், தொழில்நுட்பத்தை பயன்படுத்திய விதமும் மிகவும் சிறப்பாக உள்ளது. நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதை தவறவிட்டுவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.