விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் மெத்தனால் சாராயம் குடித்து 78
பேர் பாதிக்கபட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்த நிலையில்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு லதா,
லட்சுமணன் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை
அமைக்கப்பட்ட நிலையில் சேலத்தை சார்ந்த ஒரு மருத்துவர் மட்டுமே பணிக்கு வந்து
ஒரு நாள் பணி செய்துவிட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
முண்டியம்பாக்கம் மருத்துவமனை நிர்வாகனத்தினர் அரசு உத்தரவினை மதிக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் கண்துடைப்பாக மருத்துவ குழு அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் முத்து என்பவருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. மேலும் இருவருக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேருக்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் விஷ சாராயம் அருந்தி தெய்வநாயகம், ராயதுரை ஆகியோர் மருத்துவமனையிலிருந்து தப்பித்து சென்ற நிலையில் அவர்கள் இருவரையும் தேடும் பணியையும் போலீசார் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.







