பெரியகுளத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பாதிக்கபட்ட பகுதிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்டப்புலி ஊராட்சி
பகுதிகளான ஈ புதுக்கோட்டை, ஜே கே காலனி, ஆரோக்கிய மாதா நகர், கக்கன் ஜி காலனி,
அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த
கனமழையால் மரங்கள் வேருடன் சாய்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் சூறாவளி காற்றால் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்தால் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது மற்றும் இடிபாடுகளில் சிக்கி 2 கால்நடைகள் காயமடைந்தன.
தகவல் அறிந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூறாவளி காற்றால் சேதம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி கால் ஒடிந்த இரண்டு கால்நடைகளையும் பார்வையிட்டு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து கால்நடை
ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல உத்தரவிட்டார்.
மேலும் சூறாவளி காற்றால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களையும் வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். வீடுகள் சேதம் அடைந்ததில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.







