நடப்பு கல்வியாண்டில் முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 376 ஆரம்பப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஜனவரி 15ம் தேதிக்குள் அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆன்லைன் வகுப்பை பள்ளிகள் சரியாக நடத்தவில்லை என்றால் பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக இதுவரை 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.







