மக்கள் நீதி மய்யத்திற்கு மறுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னம்…. சட்ட வல்லுநர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை!

தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மறுக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், மக்கள் நீதி…

தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மறுக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் அருணாச்சலம், விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஸ்எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டார்ச் லைட் சின்னத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடக்கை குறித்து, கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி, நீதிமன்றத்தை நாடுவது, சின்னம் மறுக்கப்படும் பட்சத்தில் வேறு சின்னத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply