பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில்…

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து காதலியை கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக இஸ்மாயிலிடம் பேசுவதை ஆஷா நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த இஸ்மாயில் தன்னை தொடர்ந்து காதலிக்குமாறும், தன்னிடம் பேசுமாறும், ஆஷாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் தொலை பேசி, மற்றும் வாட்ஸ் அப் மூலமும் ஆஷாவுக்கு தொடர் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால் ஆஷாவோ இஸ்மாயிலின் நட்பை முழுமையாக துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இஸ்மாயில், ஆஷாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால் கடந்த திங்கள் கிழமை (21-12-2020) காலையில் அலுவலகத்திற்கு செல்வதற்காக ஆஷா அவரது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வந்துள்ளார். சிறிது தூரம் சென்றதும் எதிரே இஸ்மாயில் வந்துள்ளார். ஆனால் இஸ்மாயிலை ஆஷா கண்டுகொள்ளவில்லை, இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இஸ்மாயில் ஆஷாவை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சுயநினவை இழந்த ஆஷா ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை பார்த்தவர்கள் இஸ்மாயிலை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply