பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் யஷ்வந்த் சின்கா அக்கட்சியில் இணைந்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்கா, ஜனநாயக அமைப்புகள் வலுவாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்படும் என்று கூறினார். ஆனால், இப்போது நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பலவீனம் அடைந்துவிட்டதாக ஜஸ்வந்த் சின்கா குறிப்பிட்டார்.
பாஜகவில் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.







