“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண்…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், காங்கிரஸ் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவசாயிகளிடையே பயத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை
அரசு வழங்கும் என்றும், விவசாயிகளின் நண்பனாக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply