டெல்லி போராட்டகளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்!

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்த 20 பேருக்கு விவசாயிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட…

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை உயிரிழந்த 20 பேருக்கு விவசாயிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 20 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் தொடங்கிய காலம் முதல் காவல்துறை தடியடி, கூட்ட நெரிசல், குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 போராட்டக்காரர்களுக்கு டெல்லியில் விவசாயிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். போராட்டகளத்தில் திரண்ட விவசாயிகள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply