பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி ஆஜராகும்படி, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம்,…

பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி ஆஜராகும்படி, நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், எலிசபெத் ஹெலன், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கணவர் பீட்டர் பால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply