இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா இடம்பிடித்துள்ளனர்.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்று. அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் அதிக செல்வாக்கு மிகுந்த 1000 பேரின் பட்டியலை Hype Auditor தயாரித்து வெளியிட்டுள்ளது. அவர்கள் இடும் பதிவுகள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியலை தயாரிக்கின்றனர்.
அதில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது ஒவ்வொரு பதிவுக்கும் சுமார் 4.5 மில்லியன் Engagement இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர் விராட் கோலி முன்னிலையில் இருக்கிறார். அவர் இந்த பட்டியலில் 12வது இடத்தை பிடித்துள்ளார். பிரதமர் மோடி 19வது இடத்தையும், நடிகை அனுஷ்கா சர்மா 25வது இடத்தையும், கத்ரினா கைஃப் 45வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
விராட் கோலி- அனுஷ்கா தம்பதியரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். பல்வேறு நிறுவனங்களுடன் கைகோர்த்து ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்யும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







