பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்த பாலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மர்ம மரணம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பலுசிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலூச், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசு மற்றும்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பலுசிஸ்தானை சேர்ந்த சமூக ஆர்வலர் கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலூச், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் அனுகுமுறைக்கு எதிராக தொடந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக ஆர்வலர் கரிமா பலூச். இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இதனிடையே பாகிஸ்தான் அரசு மற்றும் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வந்ததை தொடந்து கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் கரிமா பலூச் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த அவர் இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்களில் செய்து வெளியாகியுள்ளது.. இதனைக் கனடா அரசும், கரிமாவின் குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர். கரிமாவின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரிமாவின் மரணத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் தேசிய இயக்கம் 40 நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply