மார்கழி மாதத்தையொட்டி அதிகரித்துள்ள பூக்கள் விலை!

மார்கழி திருவிழா, கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக மலர் சந்தைகளில் பூக்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு…

மார்கழி திருவிழா, கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக மலர் சந்தைகளில் பூக்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில், மார்கழி விழாக்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டுத்தாவணி மலர் சந்தையில் 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் ஆயிரத்து 800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு நீடிப்பதால் மல்லிப் பூவின் விலை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply