கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்: கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கடமை தவறினால் ராஜினாமா செய்வார்கள் என்று கமல் பேசினார். சென்னை தி.நகரில் தனியார் உணவு விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர்கள் அணி கூட்டம்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கடமை தவறினால் ராஜினாமா செய்வார்கள் என்று கமல் பேசினார்.

சென்னை தி.நகரில் தனியார் உணவு விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வழக்கறிஞர்கள் அணி கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், இப்போது நம் நாடு மீட்கபட வேண்டிய நிலையில் இருக்கிறது மீட்பதற்கான வேலையை தமிழகத்தில் இருந்து துவங்குவோம் எனவும், ஆழமான நேர்மையான காரணத்திற்காகவும், தான் நினைத்த தமிழகத்தை உருவாக்கவே அரசியல் களத்தில் இறங்கி உள்ளதாகக் பேசினார். தொடர்ந்து பேசிய கமல் கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்.

மேலும் வழக்கறிஞர் சேமநல நிதி 7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply