கொரோனா அச்சுறுத்தலால், சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் பேர் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களையே காண முடிகிறது. அங்குள்ள பாத்திரக்கடைகள், உணவகங்கள் என அனைத்துக் கடைகளும் ஆள் நடமாட்டமின்றி வெறுமையாக காட்சியளிக்கின்றன. பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பெருமளவு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர்.







