மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி ஜனவரி…

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி ஜனவரி மாதம் தனது முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ள நிலையில் ,மதுரையைச் சேர்ந்த அவரது ஆதரவாளர் ஒருவர் “விளைவுகளை ஏற்படுத்தாத எந்த செயலும் செயல் அல்ல” செயலே! புறப்படு! வென்றிடு!!* என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரில்,கலைஞர், மு.க.அழகிரி,அவரது மகன் துரைதயாநிதி அவர்களுடன் அதிமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்,புரட்சியாளர் சேகுவேரா ஆகியோரது படங்களும் இடபெற்றுள்ளது.

கமல், ரஜினி ஆகியோர் எம்.ஜி.ஆரை சுட்டிகாட்டி பேசி வரும் நிலையிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினர் அடிக்கும் போஸ்டரில் யார் யார் புகைப்படங்கள் இருக்க வேண்டுமென கட்டுபாடுகள் விதித்துள்ள நிலையில், அழகிரியின் ஆதரவாளர் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை போஸ்டரில் அச்சிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply