நாமக்கல்லில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்த பொதுமக்கள்!

நாமக்கல் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உட்பட்ட மோகனூர், பரளி, வளையபட்டி, லத்துவாடி உள்ளிட்ட…

நாமக்கல் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு உட்பட்ட மோகனூர், பரளி, வளையபட்டி, லத்துவாடி உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட கிராமங்களில் 700 ஏக்கர் பரப்பளவில்
சிப்காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை
அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். விளை நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு
தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு
போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் சிப்காட் க்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த
விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சுமார் 100 க்கு மேற்பட்டோர் இன்று மோகனூர்
சாலையில் உள்ள குன்னிமரத்தான் கோவிலில் இருந்து ஆஞ்சநேயர் கோவில் வரை
பால்குடம் சுமந்து வந்தனர். அப்போது அவர்கள் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம்
செய்ய அந்த பாலை வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.