நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமர் 40,000 கொரோனா தொடர்பான ஊழல் புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே நோய்பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியது. இதனிடையே கொரோனா சிகிச்சை மற்றும் முறையாக அதிகாரிகள் செயல்படாமல் உள்ளது தொடர்பாக புகார் அளிக்க மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு இணைதள போர்டலை உருவாக்கியது. அதன்படி இதுவரை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 167,000 புகார்களைப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெறிவித்துள்ளது.
இந்த புகார்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கையாளும் போது அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானது, லஞ்சம் மற்றும் நிதி மோசடி புகார்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் தொடர்பாக மட்டும் 40,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







