தோல்வியையும் வெற்றியையும் சமமாக ஏற்றுக்கொள்கிறேன் – மஜத தலைவர் குமாரசாமி

தோல்வியையும் வெற்றியையும் சமமாக ஏற்றுக்கொள்கிறேன் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி…

தோல்வியையும் வெற்றியையும் சமமாக ஏற்றுக்கொள்கிறேன் என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

தேர்தல் முடிவுகள் குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தோல்வியும் வெற்றியும் எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் புதிதல்ல. முன்பு தேவே கவுடா, எச்.டி.ரேவண்ணா மற்றும் நானும் தோல்வியடைந்தோம். மேலும், நாங்கள் வெற்றி பெற்ற போது, ​​அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்தோம். வரும் நாட்களில் கட்சியை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுவேன்.

மாநிலத்தில் புதிய அரசு அமைய வாழ்த்துக்கள். மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பேன். இந்த தேர்தலில் கட்சி சார்பில் இரவு பகலாக உழைத்த தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு எனது நன்றி. எக்காரணம் கொண்டும் யாரும் பீதியடைய வேண்டாம், நான் உங்களுடன் இருக்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.