சென்னை திருவொற்றியூர் கடலில் குளிக்கச்சென்று இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இன்று மூன்றாவது மாணவன் உடல் மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் சுகந்திரபுரம் கடற்கரை அருகே நேற்று கடலில் குளிக்கச்
சென்ற ஹரி, ஶ்ரீகாந்த் மற்றும் சந்துரு ஆகிய மூன்று மாணவர்கள் ராட்சச அலையில்
சிக்கி கடல் அலை இழுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள்
உள்ளிட்டோர் ஹரிஷ் மற்றும் ஶ்ரீகாந்த் ஆகிய இருவரை மீட்டு ஸ்டான்லி அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த
இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி
இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ராட்சத அலையில் சிக்கி மாயமான சந்துரு என்ற மாணவரை தீயணைப்புத் துறையினர் நீச்சல் வீரர்களோடு சேர்ந்து இரவு வரை தீவிர தேடுதலில் ஈடுப்பட்டனர். இன்று காலை மீண்டும் சந்துருவை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுனர். அப்போது சந்துருவின் உடல் சடலமாக கடலில் மிதந்ததை கண்டு மீனவர்கள் படகுகளில் சென்று உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து திருவொற்றியூர் போலீசார் அவரது உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.







