திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் ஸ்ரீபொன்னழகு தேவி அம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.இதனை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆராவரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே…

திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் ஸ்ரீபொன்னழகு தேவி அம்மன் கோயில் தேர்
திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.இதனை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆராவரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் ஸ்ரீ பொன்னழகு தேவி அம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியானது பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பிரிவில் 5 ஜோடி மாட்டு வண்டிகள் சிறிய மாட்டு வண்டி பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும் பூச்சிட்டு மாட்டு வண்டி பிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி ஜோடிக்கு கோனாபட்டு விளக்கு வரை போக வர 12 கிலோமீட்டர் தூரமும் சிறிய மாட்டுவண்டி ஜோடிகளுக்கு துணையானூர் விளக்கு வரை 9 கிலோ மீட்டர் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி ஜோடிகளுக்கு வெங்களூர் விளக்கு வரை 8 கிலோ மீட்டர் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது.

மதுரை – புதுக்கோட்டை சாலையில் தொடங்கிய பந்தயத்தில்
கலந்துகொண்ட மாட்டு வண்டி ஜோடிகள் நான்கு கால் பாய்ச்சலில் சாலையில் துள்ளி
குதித்து சீறிப்பாய்ந்து சீறிப்பாய்ந்து சென்றது. சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு
வண்டி ஜோடிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். இந்த போட்டியில் முதல் பரிசான 20,023 ரூபாயை மதுரை மாவட்டம்மதுரை மாவட்டம் ஆனையூர் சன் மித்திரன் என்பவரது மாட்டு வண்டியும் இரண்டாவது பரிசான 16,023 ரூபாயை சிவகங்கை மாவட்டம் கணக்கம்பட்டி கோமாளி அம்மன் மருதப்ப சாமி
என்பவரது மாட்டு வண்டியும் மூன்றாவது பரிசான 12,,023 மதுரை மாவட்டம்
கள்ளந்திரி ஐந்து கோயில் சாமி என்பவரது மாட்டு வண்டியும் நான்காவது பரிசான
8,023 ரூபாயை புதுக்கோட்டை மாவட்டம் பில்லமங்கலம் அடைக்கப்பன் என்பவரது மாட்டு வண்டியும் பெற்றது.

இதே போல நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு பிரிவில் முதல் நான்கு  இடங்களை பெற்ற மாட்டுவண்டி ஜோடிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.