திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு! திரளான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று,  காலை 8 மணி முதல்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று,  காலை 8 மணி முதல் 10  மணி வரை  உற்சவர் மலையப்பசாமியின் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது.

இரவு 7 மணி முதல் 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனம்  சாமி புறப்பாட்டை முன்னிட்டு கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி அங்கு தங்க சிம்மவாகனத்தில் எழுந்தருளினார்.

அதை தொடர்ந்து உற்சவருக்கு திருவாபரண, பீதாம்பர சமர்ப்பணம், தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டன.  பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே ஏழுமலையானின் சிம்ம வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.