தமிழ்நாடு வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நான்கு வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்களில் 3…

பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நான்கு வனச்சரகங்களில் யானைகள்
கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்களில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனக்காப்பாளர் தலைமையில் வேட்டை தடுப்பு
காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில்
ஈடுபட்டுள்ளனர்.

முதல்நாள் நேரடியாக காண்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம்
சென்று காண்பது, 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில்
நேரடியாக காண்பது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

இன்று முதல் மூன்று நாட்கள் ஒரே நேரங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதாகவும் மூன்று நாட்கள் கணக்கெடுப்புக்கு பின் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.