ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்று காலை பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சோதனை…

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நேற்று காலை பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சோதனை மேற்கொண்டர். பதுங்கியிருந்த தீவிவிரவாதிகளை சரண் அடையும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், சரண் அடைய விருப்பம் இல்லாத தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் அவர்கள் மீது பதில் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீர ர் படுகாயம் அடைந்தார்.

கொல்லப்பட்டவர்களின் ஒருவர் சோபூரை சேர்ந்த அமிர் சிராஜ் என்று தெரியவந்த து. இன்னொரு நபர் பாகிஸ்தானை சேர்ந்த அப்ரார் என்ற லூங்கூ என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஜெய்ஸ் இ முமகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். இந்த இரண்டு தீவிரவாதிகளும் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply