சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து 4.4 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரொனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

சென்னையில் நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரொனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை காவல்துறையினரும் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 66ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 8 ஆம் தேதி முதல் 2351 பேர் மீது முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் நேற்று மட்டும் 3 வழக்குகள் பதியப்பட்டு 1500 ரூபாய் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.