அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசி பரிசோதனையானது 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல திட்டமிட்டார்.
அதன்படி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த மோடி, சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனையின் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்தார்.
அகமதாபாத்தை தொடர்ந்து புனேவில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திலும் பிரதமர் ஆய்வு செய்தார்.







