கொரோனாவையும் பொருட்படுத்தாமல் சாலைக்கு வந்து பொதுமக்களுக்கு உதவிய பிரபல ஹாலிவுட் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், அமெரிக்காவில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.  ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற ஃபைட் கிளப், செவன், கியூரியஸ் கேஸ் ஆஃ பெஞ்சமின் பட்டன் ஆகிய படங்களில்…

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், அமெரிக்காவில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். 

ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற ஃபைட் கிளப், செவன், கியூரியஸ் கேஸ் ஆஃ பெஞ்சமின் பட்டன் ஆகிய படங்களில் நடித்தவர் பிராட் பிட். உலகம் முழுவதும் கோடிக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். கொரோனாவால் தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு திரை பிரபலங்களும் உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்  பிராட் பிட்டும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு லாரி மூலம் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்த பிராட் பிட், ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி தனது கையால் பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினார். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பிராட் பிட் முகக்கவசம் அணிந்திருந்து கொண்டு மிகவும் எளிமையாக வந்திருந்ததால் பலருக்கும் அவர் யார் என்பதே தெரியவில்லை. பின்னர் முகக்கவசத்தை அகற்றிய அவர், அங்கிருந்த தன்னார்வலர் ஒருவருடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உச்சநட்சத்திரம் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் மக்களிடையே நடந்துக்கொண்ட பிராட் பிட்டிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Image

56 வயதான பிராட் பிட், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடைசியாக நடைபெற்ற ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில்  ‘Once upon a time’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply