கொரோனா காலத்தில் இருந்த மயானத்திற்கு சிபாரிசு என்ற நிலையை மாற்றியது திமுக அரசு என்று செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஊடகவியலாளர்களான மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் இயக்குநர், திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களிடம் தடுப்பூசி போடுவதற்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனாவை படிப்படியாக குறைத்து இருக்கிறோம்.
மருத்துவமனையில் சிபாரிசு என்ற நிலை மாறி மயானத்தில் சிபாரிசு என்ற நிலையை எட்டியது அப்படி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு 8 மாதங்கள் தேவைப்பட்டது அரசிற்கு என்றும் அதேபோன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
மோசமாக இருந்த நிதி நிலைமையில் இருந்து மீண்டு வர வேண்டியிருந்தது என்றும்
தெரிவித்தார்.
மேலும் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக இருக்கிற ஊடகவியலாளர்கள் உண்மையான செய்தி மக்களிடம் கொண்டு செல்ல பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தில் வளர்ந்த நிலையில் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை சட்டரீதியாக ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய நீதியரசர் சந்துரு, 1975 ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் அறிவிப்பு விடுத்திருந்தார். அதிகமாக சட்டம் படித்தால் எழுதுவதை நிறுத்தி விடுவீர்கள். ஒரு காலத்தில் ஊடகத்தில் இருப்பவர்களுக்கு சங்கம் இல்லாமல் இருந்தது.
குற்றவியல் வழக்குகளில் இன்று பாலியல் புகார், வன்கொடுமை உள்ளிட்ட சில செய்திகள் அவர்களின் பெயர்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. முன் தனிக்கை என்ற ஒரு சட்டம் 2 ஆண்டுகள் அமலில் இருந்தது. பிபிசி நிறுவனம் கடந்த காலங்களில் மோடி கைது செய்யப்பட்டபோது பிபிசி வானொலி மூலமாக மக்களுக்கு செய்தி சென்றது. ஆனால் இன்று மோடியை பற்றி ஆவணப்படம் எடுத்ததற்கு பிபிசி நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
குடிமகன்களுக்கு இருக்கிற கருத்து சுதந்திரம் தான் ஊடகங்களுக்கும் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. செய்தியாளர்கள் சட்ட வரையறைக்குள் இருந்து செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று பேசினார்.







