சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் : SK21 நியூ அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் SK21 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் SK21 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக மிஷ்கினும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சரிதாவும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்திற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இது தவிர இந்த வருட தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி SK21 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தை ‘ரங்கூன்’படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாகவும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சிவார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிவார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.