கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. உலக  வெப்பமயமாதலை தடுக்க வேண்டியும், அதிகரித்து வரும் கத்திரி வெயிலில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பலர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து மின்னல் காளி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். பிறகு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு நாள் முழுக்க அன்னதானம் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.