ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான், டோக்கிய கடலில் மீண்டும் வைக்கப்பட்டது ஐந்து ஒலிம்பிக் வளையங்கள்!

கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று…

கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் யோகோஹாமாவில் கப்பலில் மீண்டும் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவிருந்த ஒலிபிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டு பாதுகாப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நீக்கப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள் ஜப்பானில் தற்போது மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

15 மீட்டர் உயரம் மற்றும் 33 மீட்டர் அகலத்தில் நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ள இந்த வளையங்கள் ஒவ்வொரு இரவும் இந்த வளையங்கள் மின் விளக்குகளால் ஒளிரவைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் காட்சிபடுத்தப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 15,400 வீரர்கள் பாதுகாப்பாக ஜப்பானுக்குள் வரலாம் என்ற நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply