அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நோய் பரவலை தடுக்கும் வகையில் கொரோனா பரிசோதனையையும் அரசு துரிதப்படுத்தியுள்ளதோடு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற விஞ்ஞான சிக்கல்களை, உண்மை தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.72% உள்ளது. அதே சமயம் 10 லட்சம் மக்கள் தொகையில் இந்தியாவில் 211 பாதிப்புகள் மட்டுமே பதிவாகிறது. இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply