இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியஅணி தடுமாறி வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் அடிலைட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று, முதல் இன்னிங்சை தொடங்கிய…

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய
அணி தடுமாறி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் அடிலைட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி இந்திய அணி, கூடுதலாக 11 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த நான்கு விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. இந்த அணி தரப்பில், தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply