தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை…

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டுத்தேர்வை நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை, தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும், அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்களை வைத்து, தேர்ச்சி வழங்குவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply