ஆன்லைன் வகுப்பு படிக்க வற்புறுத்திய பெற்றோர்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள்!

ஆன்லைன் வகுப்பு படிக்க பெற்றோர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடி வந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சேகர். இவரது…

ஆன்லைன் வகுப்பு படிக்க பெற்றோர்கள் வற்புறுத்தியதால் வீட்டை விட்டு ஒடி வந்த இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சேகர். இவரது மூத்த மகன் ஆறாம் வகுப்பும், இளைய மகன் எல்கேஜியும் படித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த சில மாதங்களுக்கு மேலாக வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேகர், தனது இரண்டு மகன்களும் ஆன்லைன் வகுப்புகள் படிக்க வேண்டும் என்று கூறிவந்துள்ளார். ஆனால் ஆன்லைன் வகுப்பு படிப்பதற்கு குழந்தைகளுக்கு விருப்பமில்லை. மாணவர்கள் வீட்டைவிட்டு ஓடிவந்து பின்னர் அடையாளம் தெரியாத நபர் உடன் இருசக்கர வாகனத்தில் ஏறிச்சென்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி காவல் ஆய்வாளர் ரமேஷ் மாணவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் துர்க்கை அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் தந்தையை வரவழைத்து மாணவர்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் ரமேஷ் தங்களது பிள்ளைகளை அன்பாக பேசி பழகி பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply