அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அதேநேரத்தில், தனியார் பள்ளிகள் வேண்டுமானால் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாடத்திட்டங்களை பொறுத்தவரையில் 9 ம் வகுப்பு வரையில் 50 சதவீதமும், 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் 65 சதவீதம் பாடத்திட்டங்களும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.







