சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் கார் பட்டறையில் பழுது பார்த்துக்
கொண்டிருந்த கார் மின் கசிவு காரணமாக திடிரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையார் பாளையத்தில் ஜங்கமசமுத்திரம்
குட்டிக்கரட்டைச் சேர்ந்த அருள் என்பவர் கார் பட்டறை நடத்தி வருகிறார். இதனிடையே வாடிக்கையாளர் ஒருவரின் காரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் ஒயர் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பட்டறையில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதும் மளமளவென பற்றிய தீயை உடனடியாக அணைக்க முடியாததால் கார் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து
தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கார் எரிந்த சம்பவத்தை பார்த்த பொது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..







