ஐ.நா.பொதுச்சபை மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக் கா புறப்பட்டார்.
ஐ.நா. பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர் கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கொரோனா தடுப்பு தொடர்பான மாநாடு இன்று நடக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை அவர் நாளை சந்திக்கிறார். பின்னர் அமெரிக்க தொழிலதிபர்களுடன் கலந்துரையாடும் பிரதமர், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கிறார். பின்னர், துணை அதிபர் கமலா ஹாரிஸை பிரதமர் மோடி நாளை சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள்இணைந்து உருவாக்கி யுள்ள குவாட் கூட்டமைப்பின் மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, பிராந்திய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.








