அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. போனி கபூர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்

நடிகர் அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் ரிலீஸ் எப்போது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை, போனி கபூர்…

நடிகர் அஜித் நடித்துள்ள ’வலிமை’ படத்தின் ரிலீஸ் எப்போது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை, போனி கபூர் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கி றார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். சில மாதங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு, ரஷ்யாவில் நடந்து முடிந்தது. அப்போது அஜித், ரஷ்யாவில் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே ரஜினியின் ’அண்ணாத்த’, சிம்புவின் ’மாநாடு’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ’வலிமை’ பட ரிலீஸ் குறித்து ரசிகர்கள் ஆவ லாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் ஆகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.