முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

‘என்னை தாக்கி ஆசிட் வீச முயற்சி..’ பிரபல நடிகை புகாரால் பரபரப்பு

பிரபல நடிகை மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருப்பவர் பாயல் கோஷ். தெலுங்கு மற்றும் இந்தியில் சில படங்களில் பாயல் கோஷ், கடந்த சில மாதங்களுக்கு முன் இயக் குநர் அனுராக் காஷ்யப் மீது பரபரப்பு பாலியல் புகாரை கூறியிருந்தார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார், அனுராக் காஷ்யப்.

இந்த புகார் தொடர்பாக நடிகை பாயல் கோஷ் மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்தும் புகார் அளித்தார். பிறகு அவர், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் மகளிர் பிரிவு துணைத் தலைவராக இப்போது இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து தாக்கியதாகவும் ஆசிட் வீச முயன்றதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராம்தாஸ் அத்வாலே-வுடன் பாயல் கோஷ்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: சமீபத்தில் மும்பையில் காரில் சென்று கொண்டிருந் தேன்.  முகமூடி அணிந்திருந்த சிலர் என்னைச் சுற்றி வளைத்து தாக்க முயன்றனர். நான் கூச்சலிட்டேன். ஒருவன் இரும்பு கம்பியால் என்னைத் தாக்க முற்பட்டான். அதை தடுக்க முயன்றபோது கையில் பலத்த காயமேற்பட்டது. அவர்கள் கையில் பாட்டில் வைத் திருந்தனர். அது ஆசிட்டாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்குள் அங்கு மக்கள் கூடி விட்டதால், அவர்கள் தப்பிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்த்தித்து ஆறுதல் கூறி னார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு பாயல் கோஷுக்கு பாதுகாப்பு வழங் கவும் மாநில அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

யூகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Saravana Kumar

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Saravana Kumar

அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும்: புதுச்சேரி அரசு

Vandhana