ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்ற ஸ்விக்கி

2021-ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தங்களுக்கு கிடைத்த உணவு ஆர்டர்களின் அடிப்படையில் உணவு விற்பனை தொடர்பான…

2021-ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தங்களுக்கு கிடைத்த உணவு ஆர்டர்களின் அடிப்படையில் உணவு விற்பனை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியர்களின் பிரியமான உணவாக, இந்த ஆண்டும் பிரியாணியே நீடிக்கிறது எனவும், ஸ்விக்கி தளத்தில் இந்த ஆண்டு மட்டும் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 115 பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

https://twitter.com/news7tamil/status/1473571012184666114

பிரியாணி மீதான இந்தியர்களின் தீராத காதலை இந்த தகவலின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உணவு பட்டியலில் பிரியாணிக்கு முதலிடம் என்றால், திண்பண்டங்கள் பட்டியலில் சமோசாவும், பாவ் பஜ்ஜியும் ஆதிக்கம் செலுத்துகிறது எனலாம். இனிப்பு வகைகளில் அதிகம் ஆர்டரை குலோப் ஜாமுனும், ரசமலாயும் என்ற தகவலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது ஸ்விக்கி.

சென்னை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுபட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. சிக்கன் பிரைடு ரைஸ், மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவற்றையும் நமது சென்னை வாசிகள் அதிகளவில் உண்டு மகிழ்ந்துள்ளனர்.

சென்னையை போலவே ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ நகர மக்களும் சிக்கன் பிரியாணியையே அதிகம் ஆடர் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.