எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு “இசட் ப்ளஸ்” பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு “இசட் ப்ளஸ்” பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு “ஒய் ப்ளஸ்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டசபை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.

இதன் காரணமாக கூடுதல் பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இசட் பிளஸ் பிரிவில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.