கேரளாவில் இளைஞரின் வெறிச்செயல்! சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் கொலை!!

கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரையை இளைஞர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் பூயப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் சந்தீப். மதுபோதைக்கு அடிமையான இவர்…

கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரையை இளைஞர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் பூயப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் சந்தீப். மதுபோதைக்கு அடிமையான இவர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் குடும்பத்தினருடன் சந்தீப் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக கொல்லத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸை, சந்தீப் அங்கிருந்த கத்தரிக்கோலால் மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் மருத்துவர் வந்தனா தாஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், தடுக்க சென்ற போலீசார் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 7 நாட்களுக்குள் கொல்லம் மாவட்ட எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.